Saturday, October 27, 2012

என்னில் என்னை உணர்கிறேன்!


Jokes apart (a light weight poem, and another one),
I wanted to write something bit more traditional; a bit more serious. Of course I wasn't planning to change the society and people's behavior in this, but something that may touch a little bit deeper than the surface. 

I had my questions in my mind, is this too common? Thought about these... however, our general feelings are not changing... For example, if someone pinches one feels the pain... So I guess, it is ok to hear a bit of music inside when there is a pleasant moment, right?

anyways ... here we go! 



மனசுக்குள்ளே 
சன்னமாய் 
ஒரு குழல்  
ஓசை!

கண்ணுக்குள்ளே 
பனித் துகள்கல்களை 
வைத்தது போல 
ஓர் குளிர்வு!

இரவை போர்த்திய 
நிலவை போல 
இதமாய் 
ஓர் அணைப்பு!

மல்லிகைக்குள் 
மணம் எங்கே 
புதைந்து 
கிடக்கிறது... 
தேடி தேடி 
அயர்வு கொள்கிறேன்
என் மனதை 
தேடியது போல! 

உன்னில் என்னை 
உணரும் போது
என்னில் என்னை 
உணர்கிறேன்!


Saturday, October 20, 2012

நவீன பண்பாடு - 3


----------------
புடவை கலாச்சாரம் 
காணாம போயிடுமோ 
என்று 
கவலை கொண்டு... 
நெசவாளி 
பாக்கெட் வைச்ச 
புடவை நெய்கிறான்! 
தையல்காரன் 
குழாய் வைச்ச
உள்பாவாடை தைக்கிறான்! 
------------------


Previous two on this series can be found 



----------------



எல்லாம் உன்னால்தான் ...


I got a comment to one of my previous kavithai that 
it sounded like it was written by a high school/college student. 
That triggered an idea... So lets try this... 

***
பித்தன் கிறுக்கன் 
பைத்தியம் 
என்று எது வேணாலும்  
சொல்...
***

படிக்கும் tweet எல்லாம் 
உன்னை பற்றியே! 
பார்க்கும் flickr எல்லாம் 
உன் படமாய்! 
***

Google தேடல் எல்லாம் 
உன்னில் முடிகிறது!
Map'லெ தேடும்
திசை எல்லாம்
உன்னை காட்டுகிறது!
***

இன்பாக்ஸ்'ல் இதயம்
உருகுது!
SMS'ல இதயம்
துடிக்குது!
***

wine'ல் மிதிபட்ட 
திராட்சை போல,
கள்ளில் மிதந்த 
வண்டு போல,
மனசு பாடு படுகிறது 
பாட்டு படிக்கிறது!
***

எல்லாம் உன்னால்தான் 
என 
நான் அறிவேன்; ஊர் அறியும்; 
நீ அறிவாயா?
***



Friday, October 19, 2012

Mind & Self...

--------------------

"மனசு" 
விதைத்த ஆசை விதை 
சிறிதாய் 
வேர் விட்டு முளை விட்டு 
இலை விட்டு 
வளர்கிறது 
"தான்" 
என்கிற நீர் ஊற்றி!

------------------------

[மனது தனக்கு அடிமையாய் இருக்கும் வரை எல்லாம் நல்லது... 
தான் மனதுக்கு அடிமையானால் ...???!!!]



Monday, October 15, 2012

நவீன பண்பாடு - 2

 I guess this could be series of kavithai. There are so many things to write about in this fashion! Right? Here is a one that I wrote earlier ... நவீன பண்பாடு - 1!


-------------------------------------
"அய்யய்ய! பார்பர் ஷாப் 
பக்கமெல்லாம் போகாதே! 
அபசாரம்!"
என்று அலறிய பாட்டி 
"பேசாம, பியுட்டி பர்லோர் 
போய்ட்டு வா!"
என்று பேத்தியிடம் 
சொல்லி அனுப்பினாள்!




---------------------------------------

Sunday, October 14, 2012

நவீன பண்பாடு!

------------------------------------------


மரம் ஏறாமல்
கிளை பறிக்காமல்
பிண்ணிய பிளாஸ்டிக் மாவிலை 
தோரணம் வரவேற்கும்
நிலை கதவு!

தண்ணீர் தெளிக்காமல்
முதுகு வளையாமல்
வரைந்த ஸ்டிக்கர் கோலம் 
அலங்கரிக்கும்
வாசல் படி!

எண்ணெய் விடாமல்
திரி ஏற்றாமல்
மினுக்கும் லைட் வைத்த விளக்கு 
எரியும்
மாட குழி!




------------------------------------------

Saturday, October 13, 2012

மனதே சற்றே உறங்கி போ!

------------------------------------------------------------------------

மனது உறங்காமல்
உறங்கும் போது...

கேட்கா சத்தங்களும்
அலறும் மௌனங்களும்
சன்னமான சங்கீதமாய்...

அறியா உருவங்களும்
தெரிந்த அருவங்களும்
மெல்லிய ஓவியமாய்...

பழகா நறுமணமும்
முகர்ந்த நாற்றங்களும்
இனிய சுவாசமாய்...

மனதே சற்றே உறங்கி போ!




------------------------------------------------------------------------



என்னை பார்த்து சிரித்த புத்தர்...

------------------------------------------------------------------------------------

சிரிக்கும் புத்தரின் முன் அமர்ந்து 
அவர் சிரிப்பின் மேல் என் சிந்தனையை 
ஒருமை படுத்தினேன்! 

கண்களை மூடி என்னை என்னுள்ளே 
கொண்டடக்கினேன்! 
Buddha! Smiling Buddha!

உடலும் உள்ளமும் சிலிர்க்க 
சில நிமிடங்கள் என்னுள்ளே 
முடங்கி கிடந்தேன்!

உடல் காற்றினும் லேசாகி 
இருக்கும் இடம் சூழல் எல்லாம் மறந்து 
சப்தம் அறிந்தும் அறியா நிலையில் 
மிதந்த நேரம் சில்லென ஒரு உணர்வு 
வந்து போனது... உடல் உலர்ந்து போனது...

திடுக்கென அமைதி களைய விழித்து பார்க்க 
என் எதிரே புத்தர் என்னை பார்த்து 
சிரித்த வண்ணம்...


-----------------------------------------




Friday, October 12, 2012

காணாமல் போனது!

--------------------------------------------

தொலைந்ததை தேடும்
போதுதான் அது தொலைந்தது
என்றே தெரிய வருகிறது!

ஏன் ஏதும் சொல்லாமல்
தூரமாய் காணாமல் போனாய்?

தென்படும் தூரத்தில் இருக்கும் வரை
அதன் அருமையும் பெருமையும்
யாரும் உணர்வதில்லை!

தொலைந்ததை தேடும்
போதுதான் அது தொலைந்தது
என்றே தெரிய வருகிறது!


--------------------------------------------



Thursday, October 11, 2012

டிராஃபிக்! ( Digital Traffic )


--------------------------------------------

ரோட்டில் நடக்க முடியவில்லை ...
செல் அலைகளும் பைனரி அலைகளும்
இடையூறாய்!


--------------------------------------------
Note:
செல் = Cell
பைனரி = Binary
ரோட்டில் = On the road, sometimes in the house too... 
--------------------------------------------





Monday, October 8, 2012

காபியா? சுண்டலா?

[[ஒரு நிமிட கதை!]]

Here is another one minute story (previous one is here -- http://thaerumutti.blogspot.com/2012/10/blog-post.html! Trying to check how quickly can someone express their feel and emotion! Did it come out?

--------

மதியம் மணி 3 இருக்கும். கார்த்திய கூப்பிட்டு "நண்பா! காபி குடிக்க போலாமா?" என்றான் ராமன்.

கார்த்தி தனது தந்தைக்கு உதவியாக கடையில் இருந்தான். கடையில் ஈ அடிக்கும் நேரம். இதுதான் நல்ல சாக்கு என்று "அப்பா! ராமனோட போய் காபி குடிச்சுட்டு வரேன்! உங்களுக்கு ஏதும் வேணுமா?" என்றான்.

அப்பா, "இல்லப்பா! எனக்கு ஏதும் வேண்டாம். போயிட்டு சீக்கிரம் வந்திடுங்க!" என்று சொல்லி அனுப்பினார். காஃபி குடிக்க பத்மாகாபி (bar) பாருக்கு கிளம்பினார்கள்.

"அண்ணே! ரெண்டு காபி ஸ்ட்ராங்'ஆ சக்கர கம்மியா!" என்றான். கசந்ததான் காபி குடிச்ச மாதிரி இருக்கும். ஆர்டர் பண்ணிட்டு ரோடு சைடு'ல நின்னு அரட்டை அடிக்க ஆரம்பித்தார்கள். காபி மாஸ்டர், "ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணுங்க. பால் சுட்டுகிட்டு இருக்கு!" என்றார்.

அப்போது அங்க ஒரு பெண், 12 வயது இருக்கும். "அண்ணே! சுண்டல் வாங்கிங்கண்ணே!" என்று பாவமாக கேட்டாள்!  "இல்லம்மா! வேண்டாம்!" என்றான் ராமன்.

அந்த பெண்ணின் தோற்றமும் உருவமும் பார்க்க மனதை உருக்கியது. "அண்ணே! ப்ளீஸ்ண்ணே. வீட்டுல அம்மா தம்பி எல்லாரும் பசியோட இருக்காங்க. நான் சிக்கரமா வித்துட்டு போனாதான் கஞ்சி காய்ச்ச முடியும்! ப்ளீஸ்ண்ணே!" என்று கெஞ்சினாள்!  அந்த கண்கள் கலங்கி மல்கின! குரல் இரங்கின!

ராமன், "சுண்டல் சாப்பிடற மூட்'ல இல்ல. வேணும்னா, இந்தா 50 காசு வச்சுக்கோ, இடத்த காலி பண்ணு!" என்று விரட்டினான். அவள், "எனக்கு காசு வேணாம்'ணே! சுண்டல் வாங்கிங்க! பசில வாடுவோமே தவிர பிச்சை எடுக்க மாட்டோம்'ணே"! என்று கண்டிப்பாக காசு வங்க மறுத்து விட்டாள்.

கார்த்திக்கு பாவமாக இருந்தது. "மாப்ள! எனக்கு காபி வேண்டாம்! சுண்டல் வாங்கிக்கிறேன்டா!"  என்றான்!

-------------------------

Wednesday, October 3, 2012

சொர்க்கம் மதுவிலே...

Note: just enjoy. If you like it leave some comments & share with your friends! Thanks! 

//********************************************
அவன்
"சொர்க்கம் மதுவிலே... அதை
அனுபவிச்சு பார்த்தாதான்
தெரியும்!" என்றான்!

அறிந்து கொள்ள
ஆர்வம் கொண்டு
நம்பர் கடைக்கு போய்
அந்த கருமாந்தரத்தை
வாங்கி அருந்தினேன்!

வாந்தியும் தல வலியும்
வந்ததுதான் மிச்சம்!

பிறகு விசாரிச்சு பார்த்ததில்
தெரிய வந்தது, அவனோட
girl friend பேரு மது என்று!

//********************************************


            


Tuesday, October 2, 2012

Chennai'யில் பேரழகி!

Note: 

Friend of mine commented on my first attempt at "one minute stories", he said if I could do a "one line story". thought about it, felt it wasn't a bad idea. Then I wrote this. Well, instead of making it as a story, made it as a little kavaithai! just enjoy. If you like it leave some comments & share with your friends! Thanks! 



//********************************************

அவளை
முன்னும் பின்னும் மேலும் கீழும்
பார்த்து விட்டு
பிரமனுக்கு சிற்ப கலையில்
டாக்டர் பட்டம் கொடுக்க
முடிவு செய்த போது ...

அவள், "எலேய் கஸ்மாலம்!
இங்க இன்னா look-வுட்டுகினுகீற?!"

//********************************************

Monday, October 1, 2012

அண்ணா! ப்ளீஸ் ஹெல்ப்!


[[ஒரு நிமிட கதை! This is attempt on short - short story where readers can read this story one minute or less!]]


காலையில் பல் விளக்கி குளித்து டிபன் சாப்பிடுவது போல இந்த பசங்களுக்கு, மாலையில் டிரஸ் பண்ணி கோயில் பக்கம் போய் சைட் அடிக்காவிட்டால் நாள் முழுமை ஆகாது. அன்று ஹோஸ்டலருந்து கரிகாலன் தன் நண்பர்களுடன் கிளம்பினான்!

காம்பஸ் விட்டு வெளிய வரும்முன்னே தூரத்தில் ரெண்டு பெண்கள், தாவணியில் ஒருத்தி, சுடியில் இன்னொன்று. மாலை கல்லுரி படிப்பவர்கள் போல் தோன்றியது. பக்கத்தில் மூன்று பசங்க! அந்த செட்டப்பை பார்க்கும் போதே இந்த பசங்க பெண்களை டீஸ் செய்கிறார்கள் என்று புரிந்தது.

கரிகாலன் கிட்ட நெருங்க அந்த பெண்களில் ஒருத்தி அவனை பார்த்து, "அண்ணா! ப்ளீஸ் ஹெல்ப்! இந்த பசங்க எங்களை கிண்டல் பண்றாங்க!" என்றாள்.

கரிகாலனால் அதை தாங்க முடியவில்லை! மிகவும் கோபம் வந்தது. தன் நண்பர்களை பார்த்து, "டேய் மச்சி! என்னால இதை பொறுக்க முடியல! ரெத்தம் கொதிக்கிறது!" என்றான். நண்பர்களுக்கு ஒன்றும் புரியல! "கரிகாலனா இது?" என்று ஒரே ஆச்சரியம்.

யோசித்து கொண்டிருக்கும்போதே,  அந்த பெண்ணை பார்த்து, "இத பார்! அந்த பசங்கள நான் பார்த்துக்கறேன். ஆனா, என்னை அண்ணான்னு மட்டும் கூப்பிடாத!" என்றான்!

:-)



   

Sunday, September 30, 2012

சிவதூதன்!

சீர்காழி சென்றிருந்தார்கள்! செருப்பை காரில் விட்டு இறங்கி நடக்க ஆரம்பித்தார்கள். ஒருவர் டிக்கெட் ஒன்று கிழித்து கொடுத்தார். டிரைவர், "சார், அஞ்சு ரூபா! பார்க்கிங்!" என்றார். அவருக்கு காசு எடுத்து கொடுத்து விட்டு குடும்பத்தோடு கோயில் நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

வழியில் சிலர் பூ விற்று கொண்டிருந்தனர். சிலர் சைக்கிளில் இளநீர் கட்டி வைத்து விற்றுக்கொண்டிர்தனர். மேலும் பல வர்த்தகங்கள் நடத்து கொண்டிருந்தன.

பிள்ளைகள் இளநீர் வேண்டுமென்று கேட்க இளநீருக்காக நின்றோம். அவர் இளநீர் சீவிய அழகை போட்டோ எடுத்துக்கொண்டனர். அவர் அதை பார்த்து பூரித்து போய் சிரித்து கொண்டே pose கொடுத்தார்.

செல்லும் வழியில் சிறிது பூ வாங்கி சூடிக்கொண்டு, சூடம் கொஞ்சம் வாங்கி கொண்டு மேலும் நடந்தனர். கோயிலின் வாயிலில் நின்று கொண்டு பிரஹாரம் எவ்வளவு நீண்டு கிடக்கிறது என்று பார்த்து பிரமித்து போய் குடும்பத்தாருக்கு சுட்டி கட்டினார் தந்தையார். பிள்ளைகளும், "யெப்பா! எவ்வளவு தூரம் இருக்கும்?  இது அந்த காலத்து சங்கர் படம் போலிருக்கும் போலருக்கே!", என்று மலைத்து போயினர். [Side note: http://templenet.com/Tamilnadu/s088.html -- to know more about Seerkazhi temple!]

ஒவ்வொரு இடமாய் நின்று தந்தையார் கதைகள் சொல்ல பிள்ளைகள் கதைகள் கேட்டு உள்ளே போய் கொண்டிருந்தனர். ஞானசம்பதர் பற்றி, தோணியப்பர் பற்றி எல்லாம் தெரிந்து கொண்டனர். கோயிலின் அமைப்பை பற்றியும் அழகை பற்றியும் பேசினர்.

உள் பிரஹாரதிலிருந்து சட்டநாதர் தரிசிக்க வைத்தார் தந்தையர். முதல் நிலையிலிருந்து மூன்றாம் நிலையில் உள்ள சட்டநாதரை தரிசிக்க முடியும். சட்டநாதரை பற்றி அவருக்கு அதிகமா தெரிந்திருக்கவில்லை. "வேறு யாரிடமாவது தெரிந்து கொள்ளவேண்டும்", என்று கூறினார். பின்னர் சுற்றி மலை கோயிலுக்கு அழைத்து சென்றார். அது மலை ஒன்றும் கிடையாது. ஆனால் மலை போல ஒரு அமைப்பு. கல் படிகள் ஏறி செல்ல வேண்டும். மலை கோயிலுக்கு செல்வதற்கு டிக்கெட் வங்கி மேலே ஏறினர். இரண்டாம் நிலையில் இருந்த தோணியப்பரை தரிசித்து முன்றாம் நிலைக்கு சென்றனர்.

அங்குதான் சட்டநாதர் அருளிக்கொண்டிருப்பார். படி ஏற ஆரம்பித்தனர். அப்போது அங்கு ஒரு மனிதர் வந்தார். வெள்ளை சட்டையும் வேட்டியும் அணிந்திருந்தார். முகத்தில் வெள்ளை முடியுமாக பற்கள் பழுப்புமாக இருந்தார். அவருக்கு ஒரு கை இல்லை. அவர்அந்த குடும்பத்தோடு பேச ஆரம்பித்தார். சட்டநாதர் பற்றி சொன்னார். அவரின் கதையை விளக்கினார். "அவர வேண்டிக்கங்க! எல்லாம் நல்ல படியா நடக்கும்." பிறகு தன்னை பற்றியம் தன் கை போன கதையும் சொன்னார்.

அவருக்கு ஏதாவது உதவி செய்யனும் என தோன்ற, அவருக்கு ஒரு 50 ரூபா நோட்டை எடுத்து கொடுத்தார். "ரொம்ப நன்றி ஐயா! இத வாங்கிங்க!" என்றார். அந்த மனிதர் வாங்க மறுத்தார். தந்தையார் மீண்டும் "ஐயா! நீங்க வாங்கி கொண்டே ஆக வேண்டும்" என்றார். அவர் கண்டிப்பாக மறுத்து விட்டு கீழே இறங்க ஆரம்பித்தார். குடும்பத்தார் அனைவரும் அவர் சொன்ன விஷயங்கள் பற்றியும், சொன்ன விதம் பற்றியும் நினைத்து பார்த்து திகைத்து போய் நின்றனர்.

தந்தையார் அவர தேடி ஓடினார், காசு கொடுத்ததை இழிவா நினைத்து கொண்டிருப்பாரோ என்று தோன்ற அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஓடினார். படிகளில் அவர் தென்படவில்லை. கீழே சென்று தேடி பார்த்தார். ம்ஹும்! காணவில்லை! அங்கிருந்த சிலரிடம் அந்த மனிதரின் அடையாளம் சொல்லி விசாரித்தார். "அப்படி யாரையும் பார்க்கவில்லை", என்றனர். மலை கோயிலுக்கு டிக்கெட் விற்று கொண்டிருதவரிடம் விசாரித்தார்! அவருக்கும் தெரியவில்ல! 'இறைவா, யார் அந்த மனிதர்!' ம்ம்ம்! ஒரு பெரு மூச்சு விட்டு மீண்டும் மேல ஏறி சட்டநாதரை தரிசிக்க சென்றார்!





Friday, September 21, 2012

அப்பாவும் பால்ராசும்!

பால்ரசுவுக்கு படிக்க மிகவும் பிடிக்கும். பெரிசா ரேங்க் எல்லாம் ஒன்றும் வாங்க மாட்டன். ஆனால் நெறைய படிப்பான்.

"லேய் பால்ராசு! இப்ப என்னத்த படிச்சு கலெக்டர் வேலைக்கு போய் கிழிக்க போறியாம்!? பேசாம அப்பாருக்கூட போய் தொழில கத்துக்கலாம் இல்ல?" என்று அம்மா பால் ராச பார்த்து எப்போதும் சொல்லிக்  கொண்டே இருப்பாள். அப்பா அம்மாவை பார்த்து "எந்தாயி, புள்ளைய கடிந்து கொண்டே இருக்கே? சின்ன புள்ளதானே! நாலு எழுத்து படிக்கட்டுமே!" என்பார். 

அப்பாவுக்கு வயதாகிவிட்டது. மிகவும் தளர்ந்து போய் விட்டார். நிதமும் காலையில் தனது சைக்கிள துடைத்து, டையருக்கு காத்து அடித்து, எண்ணெய் குப்பியிலிருந்து எண்ணெய் கிளிக் செய்து... வண்டிய தயார் செய்வார். வண்டியில் பின்னால் பொறுத்த பட்ட மரப் பெட்டியில் கருவாட்ட ரொப்பிக்  கொள்வார்.  தராசையும் எடை கற்களையும் எடுத்துக் கொள்வார். தராசு நிலை சரியா இருக்கா என்று நிறுத்து பார்த்துக் கொள்வார்.

அப்பாவை பார்க்க பாவமாக இருக்கும். நைந்து போன உடலும் கிழிந்து போன உடையும் மனதை உருக்கும். அவருக்கு தொழில் மீது இருந்த பக்தி அவரின் மேல் ஒரு பெரு மரியாதையை உருவாக்கும். அவரின் உழைப்பு என்ன? அவருக்கு என்ன ஊதியம்? என்றெல்லாம் தெரியாது. ஆனா, அம்மா சொல்வது சரிதான். அவருக்கு உதவி செய்த்தான் வேண்டும் என்று தோணும்.

"புதன் கிடைச்சாலும் பொண்ணு கிடைக்காது. பால் ராசு இன்னைக்கே கிளம்பிடு!" என்று சொல்லி ஒரு நாள் அம்மா தலைக்கு எண்ணெய் தேய்த்து வாரிவிட்டு அப்பாவோடு அனுப்பி வைத்தார். அம்மாவிடம் கெஞ்சினான், "எட்டாம் வகுப்பாவது முடிச்டிடறேமா!"

அம்மா ஒப்புக்கொள்ளவில்லை. அம்மாவுக்கு என்னவோ கவலை இருந்தது. அது அப்பா மேலா இல்ல பால்ராசு மேலா என்று  தெரியவில்லை! அம்மாவை மறுக்க முடியமால் அப்பாவுடன் கிளம்பினான். அப்பா வியாபாரம் செய்யவத கவனித்து வந்தான். வெயில் வாட்டியது.

சில வாடிக்கையாளர்கள் குசலம் விசாரித்தார்கள். "என்ன கருவாட்டுகாரரே, உங்க பையனா? நல்லா சுட்டியா இருக்கானே! படிக்கவைக்கலையா?"

வீடு வந்து சேர்ந்த போது மிகவும் சோர்வாக இருந்தது. வியர்வையோடு கருவாட்டு நாற்றமும் கலந்து குமட்டியது. கிணற்றடிக்கு போய் மேலுக்கு ரெண்டு வாளி தண்ணீர் விட்டு குளித்து வந்தான். சாமி கும்பிட்டு விட்டு அம்மாவிடம் அப்பாவின் பெருமையெல்லாம் பேச ஆரம்பித்தான். அப்பாவின் கஷ்டங்கள் பற்றி பேசினான்.

அம்மா பெருமூச்சு விட்டார். பால்ரசு மேல் நம்பிக்கயுடன், "தம்பி! ரொம்ப நன்றிப்பா! அப்பாவுக்கு ஒத்தாசையா இரு!" என்று அணைத்து கொண்டார்.

இரவு சாப்பிட்டு விளக்கனைத்து படுத்தனர். பால்ராசு, "இதோ வந்திடறேன்மா!" என்று சொல்லிவிட்டு அவனோட ஃபிரன்ட்வீட்டுக்கு ஓடினான். "இன்னைக்கு கிளாஸ்ல வாத்தியார் என்னடா சொல்லிகொடுதாறு?"

Wednesday, September 19, 2012

சோற்றுக்காக சைக்கிளில் ...

பள்ளிவிட்டு வரும் போது தூரத்திலிருந்தே பார்க்க முடிந்தது -- தேருமுட்டி தெருவில் முச்சந்தியில் ஒரே கூட்டமாக இருந்தது.  என்னவாக இருக்கும் என்று உள்ளுக்குள்ளே ஒரு ஆர்வம் துடித்தது.

முச்சந்தியில் ஒரு மூங்கில் மரம் நடப்பட்டிருந்தது. அதன் உச்சியில் ஒரு ஸ்பீக்கர் கட்டபட்டிருந்தது. கீழே மக்கள் குழுமி இருந்தனர். சின்ன பிள்ளைகள் குறுக்கும் நெருக்கும் ஓடி கொண்டிருந்தனர். அட! சில தாவணிகளும் தென்பட்டது. கிட்ட நெருங்க நெருங்க என்ன நடக்குதுன்னு அறிய முடிந்தது.

"டேய் மச்சி! என்ன விஷேசம்! என்ன நடக்குது?"

"யாருன்னு தெரியல்ல! ஒரு ஆளு மூனு நாளைக்கு நிறுத்தாம சைக்கிள் ஓட்ட போறாராம். குடும்பத்தோட கேம்ப் அடிச்சியிருக்காரு!"

"மூனு நாளா? எப்பிடிடா? முடியுமா என்ன?!"

"தெரியல மச்சான், பார்க்கலாம்!"

- ஒரு பழைய டேப் ரெக்காடர், சில டேப்கள் மஞ்சள் பைககுள், ஒரு ஒலிப்பெருக்கி.

- ஒரு நடு வயது பெண்மணி, நைத்து போன புடவையுடனும், கிழிந்து போன மேலாடை, நருங்கி போன உடலும், ஆசை மிகுந்த கண்களுடனும், தன் ஆம்பளைக்கு உதவி செய்து கொண்டிருந்தார்.

- ரெண்டு குழந்தைகள், கிழிந்த பாவடையும் சட்டையுமாக, மூக்கு ஒழுக, ஒட்டிய முகத்துடன் தாயாருக்கு துணையாக வேலை செய்து கொண்டிருத்த்துகள்.

- ஒரு டோலக்கு, ரெண்டு பாத்திரங்கள்.

- ஒரு சைக்கிள் - கொஞ்சம் வித்தியாசமா இருந்தது. சில எக்ஸ்ட்ரா பிட்டிங்க்ஸ், சில ஜோடனைகள், ஒரு சாமி படம், எல்லாம் இருந்த்தது.

பக்கத்தில் இருந்த ஒரு வீட்டுக்காரரிடம் கெஞ்சி கொஞ்சம் மின்சாரம் எடுத்து டேப் ரெகார்டரில் பாட்டு போட்டு சத்தம் சரியாய் வருதா என்று டெஸ்ட் பண்ணி பார்த்து கொண்டார். சாமி படத்துக்கு சூடம் ஏற்றி கடவுளை வேண்டி கொண்டார். இங்கும் அங்கும் ஓடி கொண்டிருந்த பிள்ளைகளை முதுகில் தட்டி சாமி கும்பிட சொன்னார்.

"கடவுளே! இந்த ஊர் சனங்களுக்கு இரக்கம் உள்ள மனச கொடு. சோறும் காசும் கொடுக்க நல்ல வசதிய கொடு. சைக்கிள ஓட்ட தெம்பும் மனசும் கொடு!" சூடம் காட்டி சைக்கிளை கும்பிட்டு மேல ஏறி மிதிக்க ஆரம்பித்தார். ஊர் சனங்க கை தட்டி அவர உற்சாக படித்தினர்.

அந்த டேப்பை போட்டு விட சாமி பாட்டோடு தொடங்கியது. ஊர் மக்கள் கை தட்டி கொண்டிருந்தனர். அந்த முங்கில் மரத்தை சுற்றி வலம் வந்தார். சைக்கிள சில வித்தைகள் செய்து காண்பித்தார்.  வித்தைகள் செய்யும் போதெல்லாம் அந்த குழந்தைகள் தட்டு ஏந்தி மக்களிடம் வந்து நின்றனர். சிலர் புகழ்ந்து பேசி காசு போட்டனர். காசு போட்டா அந்த குழந்தைகள் சில வித்தைகள் செய்து காண்பித்தனர்.

சில நிமிஷங்கள், மணிகள் கடந்தன. கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக களைந்து போயி கொண்டிருந்தது. வீடுகளில் வெளக்கு ஏற்ற மக்கள் அவர் அவர் வேலையை பார்க்க தொடங்கினர். அந்த பெண்மணி பாத்திரம் எடுத்து வீட்டு வாசலில் வந்து நின்று "அம்மா! ஏதாவது மீதி இருந்தா போடுங்கம்மா!" என்று கூவினார். சிலர் சோறு போட்டனர், சிலர் "அப்பறமா வாம்மா!" என்று சொல்லி அனுப்பினர்.

முதல் நாள் இரவு, சிலர் வெகு நேரம் கழித்து வெளியில் வந்து பார்த்தனர், இன்னும் ஒட்டி கொண்டிருக்கிரா, என்று பார்த்து விட்டு சென்றார்கள்.

நானும் சென்று பார்த்தேன், ரெண்டாம் நாள் இரவில். அவர் களைத்து போய் சைக்கிளில் உட்கார்ந்த வண்ணம் முங்கில் மரத்தில் சாய்ந்து உறங்காமல் உறங்கினார். பிள்ளைகள் மடங்கி சுருங்கி தூங்கி கொண்டிருந்தனர். அந்த பெண்மணி கணவனின் காலை பிடித்து விட்டுக்கொண்டிருந்தார். நடுநடுவே காலை தொட்டு கண்களில் ஒத்தி கொண்டார்.

அந்த நிலையில் பார்த்துடன் எனுக்குள் என்னவோ நடந்தது. வயிற்ருக்குள் என்னவோ சுருண்டு கொண்டு வந்தது. என் கண்களில் தண்ணிர் கொட்டியது.  வீட்டக்குள் ஓடி ஓ என்று கத்தாமல் கத்தி அழுதேன். கடவுளே! கடவுளே! என்று கதறினேன்.

யாருக்கும் தெரியாமல் என்னோட உண்டியலையும் போர்வையும் எடுத்துக்கொண்டு மறுபடியும் வெளியே ஓடினேன். உண்டியலை அந்த அம்மாவிடம் கொடுத்தேன். போர்வையை அந்த குழந்தைகள் மேல் போர்த்தி விட்டு அப்படியே அவர் காலில் விழுந்து வணங்கினேன்! "இறைவா! இந்த குடும்பத்தை காப்பாற்று!", என்று வேண்டினேன்.