Saturday, October 13, 2012

என்னை பார்த்து சிரித்த புத்தர்...

------------------------------------------------------------------------------------

சிரிக்கும் புத்தரின் முன் அமர்ந்து 
அவர் சிரிப்பின் மேல் என் சிந்தனையை 
ஒருமை படுத்தினேன்! 

கண்களை மூடி என்னை என்னுள்ளே 
கொண்டடக்கினேன்! 
Buddha! Smiling Buddha!

உடலும் உள்ளமும் சிலிர்க்க 
சில நிமிடங்கள் என்னுள்ளே 
முடங்கி கிடந்தேன்!

உடல் காற்றினும் லேசாகி 
இருக்கும் இடம் சூழல் எல்லாம் மறந்து 
சப்தம் அறிந்தும் அறியா நிலையில் 
மிதந்த நேரம் சில்லென ஒரு உணர்வு 
வந்து போனது... உடல் உலர்ந்து போனது...

திடுக்கென அமைதி களைய விழித்து பார்க்க 
என் எதிரே புத்தர் என்னை பார்த்து 
சிரித்த வண்ணம்...


-----------------------------------------




6 comments:

  1. தியானிக்கவென முனையும் போது ஏற்படும் உள் அனுவத்தை உணர்த்தும் கவிதை அருமை

    ReplyDelete
  2. யோவ்... பாவம்யா புத்தன்... அவனை இந்த பாடு படுத்துறீங்களேய்யா...

    ReplyDelete
    Replies
    1. அட! புத்தனை யாரய்யா படுத்தியது! அவர்தான் நாமலா...!

      Delete