Showing posts with label emotion. Show all posts
Showing posts with label emotion. Show all posts

Saturday, October 20, 2012

எல்லாம் உன்னால்தான் ...


I got a comment to one of my previous kavithai that 
it sounded like it was written by a high school/college student. 
That triggered an idea... So lets try this... 

***
பித்தன் கிறுக்கன் 
பைத்தியம் 
என்று எது வேணாலும்  
சொல்...
***

படிக்கும் tweet எல்லாம் 
உன்னை பற்றியே! 
பார்க்கும் flickr எல்லாம் 
உன் படமாய்! 
***

Google தேடல் எல்லாம் 
உன்னில் முடிகிறது!
Map'லெ தேடும்
திசை எல்லாம்
உன்னை காட்டுகிறது!
***

இன்பாக்ஸ்'ல் இதயம்
உருகுது!
SMS'ல இதயம்
துடிக்குது!
***

wine'ல் மிதிபட்ட 
திராட்சை போல,
கள்ளில் மிதந்த 
வண்டு போல,
மனசு பாடு படுகிறது 
பாட்டு படிக்கிறது!
***

எல்லாம் உன்னால்தான் 
என 
நான் அறிவேன்; ஊர் அறியும்; 
நீ அறிவாயா?
***



Saturday, October 13, 2012

மனதே சற்றே உறங்கி போ!

------------------------------------------------------------------------

மனது உறங்காமல்
உறங்கும் போது...

கேட்கா சத்தங்களும்
அலறும் மௌனங்களும்
சன்னமான சங்கீதமாய்...

அறியா உருவங்களும்
தெரிந்த அருவங்களும்
மெல்லிய ஓவியமாய்...

பழகா நறுமணமும்
முகர்ந்த நாற்றங்களும்
இனிய சுவாசமாய்...

மனதே சற்றே உறங்கி போ!




------------------------------------------------------------------------



என்னை பார்த்து சிரித்த புத்தர்...

------------------------------------------------------------------------------------

சிரிக்கும் புத்தரின் முன் அமர்ந்து 
அவர் சிரிப்பின் மேல் என் சிந்தனையை 
ஒருமை படுத்தினேன்! 

கண்களை மூடி என்னை என்னுள்ளே 
கொண்டடக்கினேன்! 
Buddha! Smiling Buddha!

உடலும் உள்ளமும் சிலிர்க்க 
சில நிமிடங்கள் என்னுள்ளே 
முடங்கி கிடந்தேன்!

உடல் காற்றினும் லேசாகி 
இருக்கும் இடம் சூழல் எல்லாம் மறந்து 
சப்தம் அறிந்தும் அறியா நிலையில் 
மிதந்த நேரம் சில்லென ஒரு உணர்வு 
வந்து போனது... உடல் உலர்ந்து போனது...

திடுக்கென அமைதி களைய விழித்து பார்க்க 
என் எதிரே புத்தர் என்னை பார்த்து 
சிரித்த வண்ணம்...


-----------------------------------------




Friday, October 12, 2012

காணாமல் போனது!

--------------------------------------------

தொலைந்ததை தேடும்
போதுதான் அது தொலைந்தது
என்றே தெரிய வருகிறது!

ஏன் ஏதும் சொல்லாமல்
தூரமாய் காணாமல் போனாய்?

தென்படும் தூரத்தில் இருக்கும் வரை
அதன் அருமையும் பெருமையும்
யாரும் உணர்வதில்லை!

தொலைந்ததை தேடும்
போதுதான் அது தொலைந்தது
என்றே தெரிய வருகிறது!


--------------------------------------------



Monday, October 8, 2012

காபியா? சுண்டலா?

[[ஒரு நிமிட கதை!]]

Here is another one minute story (previous one is here -- http://thaerumutti.blogspot.com/2012/10/blog-post.html! Trying to check how quickly can someone express their feel and emotion! Did it come out?

--------

மதியம் மணி 3 இருக்கும். கார்த்திய கூப்பிட்டு "நண்பா! காபி குடிக்க போலாமா?" என்றான் ராமன்.

கார்த்தி தனது தந்தைக்கு உதவியாக கடையில் இருந்தான். கடையில் ஈ அடிக்கும் நேரம். இதுதான் நல்ல சாக்கு என்று "அப்பா! ராமனோட போய் காபி குடிச்சுட்டு வரேன்! உங்களுக்கு ஏதும் வேணுமா?" என்றான்.

அப்பா, "இல்லப்பா! எனக்கு ஏதும் வேண்டாம். போயிட்டு சீக்கிரம் வந்திடுங்க!" என்று சொல்லி அனுப்பினார். காஃபி குடிக்க பத்மாகாபி (bar) பாருக்கு கிளம்பினார்கள்.

"அண்ணே! ரெண்டு காபி ஸ்ட்ராங்'ஆ சக்கர கம்மியா!" என்றான். கசந்ததான் காபி குடிச்ச மாதிரி இருக்கும். ஆர்டர் பண்ணிட்டு ரோடு சைடு'ல நின்னு அரட்டை அடிக்க ஆரம்பித்தார்கள். காபி மாஸ்டர், "ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணுங்க. பால் சுட்டுகிட்டு இருக்கு!" என்றார்.

அப்போது அங்க ஒரு பெண், 12 வயது இருக்கும். "அண்ணே! சுண்டல் வாங்கிங்கண்ணே!" என்று பாவமாக கேட்டாள்!  "இல்லம்மா! வேண்டாம்!" என்றான் ராமன்.

அந்த பெண்ணின் தோற்றமும் உருவமும் பார்க்க மனதை உருக்கியது. "அண்ணே! ப்ளீஸ்ண்ணே. வீட்டுல அம்மா தம்பி எல்லாரும் பசியோட இருக்காங்க. நான் சிக்கரமா வித்துட்டு போனாதான் கஞ்சி காய்ச்ச முடியும்! ப்ளீஸ்ண்ணே!" என்று கெஞ்சினாள்!  அந்த கண்கள் கலங்கி மல்கின! குரல் இரங்கின!

ராமன், "சுண்டல் சாப்பிடற மூட்'ல இல்ல. வேணும்னா, இந்தா 50 காசு வச்சுக்கோ, இடத்த காலி பண்ணு!" என்று விரட்டினான். அவள், "எனக்கு காசு வேணாம்'ணே! சுண்டல் வாங்கிங்க! பசில வாடுவோமே தவிர பிச்சை எடுக்க மாட்டோம்'ணே"! என்று கண்டிப்பாக காசு வங்க மறுத்து விட்டாள்.

கார்த்திக்கு பாவமாக இருந்தது. "மாப்ள! எனக்கு காபி வேண்டாம்! சுண்டல் வாங்கிக்கிறேன்டா!"  என்றான்!

-------------------------

Tuesday, October 2, 2012

Chennai'யில் பேரழகி!

Note: 

Friend of mine commented on my first attempt at "one minute stories", he said if I could do a "one line story". thought about it, felt it wasn't a bad idea. Then I wrote this. Well, instead of making it as a story, made it as a little kavaithai! just enjoy. If you like it leave some comments & share with your friends! Thanks! 



//********************************************

அவளை
முன்னும் பின்னும் மேலும் கீழும்
பார்த்து விட்டு
பிரமனுக்கு சிற்ப கலையில்
டாக்டர் பட்டம் கொடுக்க
முடிவு செய்த போது ...

அவள், "எலேய் கஸ்மாலம்!
இங்க இன்னா look-வுட்டுகினுகீற?!"

//********************************************

Sunday, September 30, 2012

சிவதூதன்!

சீர்காழி சென்றிருந்தார்கள்! செருப்பை காரில் விட்டு இறங்கி நடக்க ஆரம்பித்தார்கள். ஒருவர் டிக்கெட் ஒன்று கிழித்து கொடுத்தார். டிரைவர், "சார், அஞ்சு ரூபா! பார்க்கிங்!" என்றார். அவருக்கு காசு எடுத்து கொடுத்து விட்டு குடும்பத்தோடு கோயில் நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

வழியில் சிலர் பூ விற்று கொண்டிருந்தனர். சிலர் சைக்கிளில் இளநீர் கட்டி வைத்து விற்றுக்கொண்டிர்தனர். மேலும் பல வர்த்தகங்கள் நடத்து கொண்டிருந்தன.

பிள்ளைகள் இளநீர் வேண்டுமென்று கேட்க இளநீருக்காக நின்றோம். அவர் இளநீர் சீவிய அழகை போட்டோ எடுத்துக்கொண்டனர். அவர் அதை பார்த்து பூரித்து போய் சிரித்து கொண்டே pose கொடுத்தார்.

செல்லும் வழியில் சிறிது பூ வாங்கி சூடிக்கொண்டு, சூடம் கொஞ்சம் வாங்கி கொண்டு மேலும் நடந்தனர். கோயிலின் வாயிலில் நின்று கொண்டு பிரஹாரம் எவ்வளவு நீண்டு கிடக்கிறது என்று பார்த்து பிரமித்து போய் குடும்பத்தாருக்கு சுட்டி கட்டினார் தந்தையார். பிள்ளைகளும், "யெப்பா! எவ்வளவு தூரம் இருக்கும்?  இது அந்த காலத்து சங்கர் படம் போலிருக்கும் போலருக்கே!", என்று மலைத்து போயினர். [Side note: http://templenet.com/Tamilnadu/s088.html -- to know more about Seerkazhi temple!]

ஒவ்வொரு இடமாய் நின்று தந்தையார் கதைகள் சொல்ல பிள்ளைகள் கதைகள் கேட்டு உள்ளே போய் கொண்டிருந்தனர். ஞானசம்பதர் பற்றி, தோணியப்பர் பற்றி எல்லாம் தெரிந்து கொண்டனர். கோயிலின் அமைப்பை பற்றியும் அழகை பற்றியும் பேசினர்.

உள் பிரஹாரதிலிருந்து சட்டநாதர் தரிசிக்க வைத்தார் தந்தையர். முதல் நிலையிலிருந்து மூன்றாம் நிலையில் உள்ள சட்டநாதரை தரிசிக்க முடியும். சட்டநாதரை பற்றி அவருக்கு அதிகமா தெரிந்திருக்கவில்லை. "வேறு யாரிடமாவது தெரிந்து கொள்ளவேண்டும்", என்று கூறினார். பின்னர் சுற்றி மலை கோயிலுக்கு அழைத்து சென்றார். அது மலை ஒன்றும் கிடையாது. ஆனால் மலை போல ஒரு அமைப்பு. கல் படிகள் ஏறி செல்ல வேண்டும். மலை கோயிலுக்கு செல்வதற்கு டிக்கெட் வங்கி மேலே ஏறினர். இரண்டாம் நிலையில் இருந்த தோணியப்பரை தரிசித்து முன்றாம் நிலைக்கு சென்றனர்.

அங்குதான் சட்டநாதர் அருளிக்கொண்டிருப்பார். படி ஏற ஆரம்பித்தனர். அப்போது அங்கு ஒரு மனிதர் வந்தார். வெள்ளை சட்டையும் வேட்டியும் அணிந்திருந்தார். முகத்தில் வெள்ளை முடியுமாக பற்கள் பழுப்புமாக இருந்தார். அவருக்கு ஒரு கை இல்லை. அவர்அந்த குடும்பத்தோடு பேச ஆரம்பித்தார். சட்டநாதர் பற்றி சொன்னார். அவரின் கதையை விளக்கினார். "அவர வேண்டிக்கங்க! எல்லாம் நல்ல படியா நடக்கும்." பிறகு தன்னை பற்றியம் தன் கை போன கதையும் சொன்னார்.

அவருக்கு ஏதாவது உதவி செய்யனும் என தோன்ற, அவருக்கு ஒரு 50 ரூபா நோட்டை எடுத்து கொடுத்தார். "ரொம்ப நன்றி ஐயா! இத வாங்கிங்க!" என்றார். அந்த மனிதர் வாங்க மறுத்தார். தந்தையார் மீண்டும் "ஐயா! நீங்க வாங்கி கொண்டே ஆக வேண்டும்" என்றார். அவர் கண்டிப்பாக மறுத்து விட்டு கீழே இறங்க ஆரம்பித்தார். குடும்பத்தார் அனைவரும் அவர் சொன்ன விஷயங்கள் பற்றியும், சொன்ன விதம் பற்றியும் நினைத்து பார்த்து திகைத்து போய் நின்றனர்.

தந்தையார் அவர தேடி ஓடினார், காசு கொடுத்ததை இழிவா நினைத்து கொண்டிருப்பாரோ என்று தோன்ற அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஓடினார். படிகளில் அவர் தென்படவில்லை. கீழே சென்று தேடி பார்த்தார். ம்ஹும்! காணவில்லை! அங்கிருந்த சிலரிடம் அந்த மனிதரின் அடையாளம் சொல்லி விசாரித்தார். "அப்படி யாரையும் பார்க்கவில்லை", என்றனர். மலை கோயிலுக்கு டிக்கெட் விற்று கொண்டிருதவரிடம் விசாரித்தார்! அவருக்கும் தெரியவில்ல! 'இறைவா, யார் அந்த மனிதர்!' ம்ம்ம்! ஒரு பெரு மூச்சு விட்டு மீண்டும் மேல ஏறி சட்டநாதரை தரிசிக்க சென்றார்!